பத்திரிகைச் செய்தி: 6.4.2026
நெகிரி செம்பிலான், ஜெலேபு அருகே உள்ள கம்போங் லக்காய் அருகில் உள்ள சுங்கை மரோங் ஆற்றின் நீர் கருமையாகவும் நுரை நிறைந்ததாகவும் மாறக் காரணமான மாசுபாட்டிற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறையை வலியுறுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஆற்றில் உள்ள மீன்களும் இறந்துள்ளது. ஜெலேபு மீன்வள மாவட்டத் தலைவர் முகமது அசார் யூசோவின் கூற்றுப்படி, இந்தப் பிரச்சினை குறித்து உள்ளூர் மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, மீன்வளத் துறை அந்தப் புகாரை விசாரித்ததில், ஆற்று நீர் கருமையாகவும் நுரை நிறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் உண்மையில் நிகழ்ந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மாசுபாட்டிற்குப் பொறுப்பான தரப்பினரைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது 1974 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை விதித்து, முழுமையான விசாரணை நடத்துமாறு சுற்றுச்சூழல் துறையிடம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறந்த மீன்கள் மற்றும் பரிசோதிக்கப்பட்ட ஆற்று நீரின் தரம் குறித்த ஆய்வின் முடிவுகளையும், அவற்றைச் சரிசெய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் சுற்றுச்சூழல் துறையும் மீன்வளத் துறையும் கூடிய விரைவில் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்ந்தால், ஆற்றில் கிடைக்கும் மீன் பிடிப்பை நம்பி வாழும் உள்ளூர் மீனவர்களின் வருமானத்தை மட்டுமல்லாமல், ஆற்றில் இருந்து விஷம் கலந்த மீன்களை உட்கொள்ள நேரிடும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கும் என்று பி.ப.சங்கம் கவலை கொண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் வருமானம் பாதிக்கப்பட்டு, மீன் பிடிப்பில் ஏற்பட்ட சரிவுக்கு ஏற்ப இழப்பீடு பெற்றுவரும் மீனவர்களுக்கு ந அனுதாபம் தெரிவித்துள்ளது.
இது சுற்றுச்சூழலிலும் மக்களின் வாழ்விலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்தச் சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்று தாங்கள் நம்புவதாக முகைதீன் கூறினார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

