நுண்நெகிழிகளை நீக்க மாணவியின் புதிய கண்டுபிடிப்பு!

வர்ஜீனியாவைச் சேர்ந்த மாணவி மியா ஹெல்லர், குடிநீரில் இருக்கும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்களை (Microplastics) சுமார் 96 சதவீதம் வரை நீக்கக்கூடிய ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளார். தனது பகுதியில் உள்ள நீர் நிலைகள் மாசடைந்திருப்பதை அறிந்த மியா, மக்கள் தங்கள் தண்ணீரைத் தாங்களே சுத்திகரித்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழி தேவை என்பதை உணர்ந்தார்.

(Source :The Female Quotient)

பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் வடிகட்டிகளில் உள்ள ‘மெம்பிரேன்’ எனப்படும் வடிகட்டித் திரைகளை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு அதிக செலவு ஆவதோடு, பராமரிப்பதும் கடினமாக இருந்தது. மியாவின் தாயார் இந்த சிரமத்தை எதிர்கொள்வதைப் பார்த்த மியா, திரைகளே இல்லாத ஒரு புதிய வடிகட்டியை உருவாக்கத் திட்டமிட்டார்.

இவரது புதிய கண்டுபிடிப்பில் ‘பெரோஃப்ளூயிட்’ என்ற காந்தத் திரவம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திரவம் நீரில் உள்ள நுண்நெகிழித் துகள்களுடன் ஒட்டிக்கொள்ளும். பின்னர் ஒரு காந்தத்தைப் பயன்படுத்தி, அந்தத் துகள்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துவிடலாம். இது கழிவுகளைக் குறைப்பதோடு, செலவும் மிகக் குறைவானது. தற்போது ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும் அளவில் இருக்கும் இந்த முறையை, எதிர்காலத்தில் எல்லா வீடுகளிலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்ற மியா முயற்சி செய்து வருகிறார்.

நமக்கு நெருக்கமானவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, “இதற்கு ஒரு மாற்று வழி இல்லையா?” என்று நாம் யோசிக்கும்போதுதான் இது போன்ற அற்புதமான கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

நன்றி : (Thank You – Source : The Female Quotient)