மனிதர்களை கடத்திய தொழில் முடிந்து இப்பொழுது மனிதக் குரங்குகளை கடத்த ஆரம்பித்து விட்டார்கள். வனவிலங்கு குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி. 11.06.2026

கே. எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை வனவிலங்கு கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

Source : Internet Image

பாதுகாப்புப் பிரிவினர் கடத்தல் முயற்சியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஆறு கிப்பன்கள் எனப்படும் சிறிய மனிதக் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

கே.எல்.ஐ.ஏ பாதுகாப்புப் பிரிவினர் கடத்தல் முயற்சியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஆறு மனிதக் குரங்குகள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு முன்பு, உயிருடன் இருந்த ஆறு கிப்பன்களைக் கடத்தும் முயற்சியை முறியடிக்கப்பட்டது பாராடுக்குரியது என்றார் அவர்.

வழக்கமான பயணப் பெட்டி சோதனையின்போது, ​​ஸ்கேனரில் சந்தேகத்திற்கிடமான ஒரு படத்தை அதிகாரிகள் கண்டறிந்தபோது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்று கே.எல்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் சிறிய வகை குரங்குகளான கிப்பன்கள் ஒரு பைக்குள் திணிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை, அனைத்து 20 கிப்பன் இனங்களையும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட வாலில்லாத மனிதக் குரங்குகள்தான் இந்த கிப்பன்ஸ்.

தங்களின் மிக நீண்ட கைகளுக்காக அறியப்படும் இவை, ‘சிறிய மனிதக் குரங்குகள்’ என வகைப்படுத்தப்படுகின்றன.

மேலும், தங்களின் உரத்த, தனித்துவமான குரல் ஒலிகளுக்கும், மரங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் அசைவுகளுக்கும் பெயர் பெற்றவை.

இதன் காரணமாக இவை அதிக அளவு கட்டத்தப்படுகின்றது.

வனவிலங்கு குற்றங்களை அதன் வேரிலேயே ஒழிக்கப்பட வேண்டும்.

பறிமுதல்கள் மட்டும் போதாது அதிக பட்ச தண்டனையும் தேவை என்றார் முகைதீன் அப்துல் காதர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்